Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அம்மா அம்மா மரியே


சகாயமாதா எங்கள் சகாயமாதா
சகலருக்கும் சகல நன்மை செய்திடும் மாதா

ஆ.....ஆ.......ஆ.........
அருள் நிறை மாதா - இயேசு ஆண்டவர் மாதா
அனைவருக்கும் அபயம் தரும் அடைக்கல மாதா ஆ.....ஆ.......ஆ.........

ஆ.....ஆ.......ஆ.........ஆ.........
வானகமும் வையகமும் வாழ்ந்திடும் மாதா
ஞானமிகு நாயகியாய் திகழ்ந்திடும் மாதா
  (தம்தனதன தம்தனதன ஆ.....ஆ.....ஆ..)
வானகமும் வையகமும் வாழ்ந்திடும் மாதா
ஞானமிகு நாயகியாய் திகழ்ந்திடும் மாதா
ஆதவனை ஆடையென அணிந்திடும் மாதா - உயர்
வானிடையே தாரகையாய் ஒளிர்ந்திடும் மாதா

ஆ.....ஆ.......ஆ.........ஆ.........
தினனதனனதினன தினனதனனதினன
திருத்தலத்தில் எழில் வடிவாய் எழுந்திடும் மாதா
அருட் தலமாய் அருளாசி பொழிந்திடும் மாதா
 (தம்தனதன தம்தனதன ஆ.....ஆ.....ஆ..)
ஒருநாளும் உனை மறவேன் உதவிடும் மாதா - இந்த
திருநாளில் வரம் யாவும் வழங்கிடு மாதா



 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா