மாதாபாடல்கள் | போற்றி போற்றி புகழுதே |
போற்றி போற்றி புகழுதே என் உன்னத தேவன் நாமமே எந்தன் மீட்பர் இறைவனே எந்தன் உள்ளம் மகிழுதே நாளும் பொழுதும் மகிழுதே அடிமை எந்தன் அவலநிலையை ஆண்டவனும் நோக்கினார் தலைமுறைகளும் பேறுபெற்றவை என்றே என்னைப் போற்றுதே தூயவர் பெயர் மகிழுதே வல்லவராம் தேவன் எனக்கு வல்ல செயல்கள் ஆற்றினார் வலிவரை உயர்த்தினார் தாழ்ந்தவர்களை தூக்கினார் உயர்த்தி வலிமை கூட்டினார் தலைமுறையாய் இரக்கம் தொடர அவரை அஞ்சும் மனிதற்கே தோள் வலிமையைக் காட்டினார் உள்ளச் செருக்கை நீக்கினார் செருக்குறோரும் சிதறவே அரியணையில் வலியோரை தரையணை மட்டும் தாழ்த்தினார் தாழ்ந்தோரை உயர்த்தினார் நலனில் பசித்தோர் சேர்க்கவே நிறைவில் நிம்மதி அளிப்பாரே பொருள் படைத்தோர் வெறும் கையராய் மாறிடவும் செய்தாரே குறித்தபடியே முதாதையர் ஆபிரகாம் வழி மரபினர் என்றும் இரக்கம் கொண்டாரே தூயவராம் இஸ்ராயேலர்க்கு துணையாய் தேவன் வருவாரே தலைமுறைகள் வாழ்த்தும் தேவன் நம்மையும் வாழவைப்பாரே பெருமையடையச் செய்வாரே |