மாதாபாடல்கள் | பரலோக அன்னையே |
பரலோக அன்னையே பரிசுத்த தாயே வாழ்கவே வாழ்கவே என் வாழ்வின் காவலே அன்னை மரியே என் வாழ்வின் தேடலே மாமரியே வாழ்கவே வாழ்கவே (2) அம்மா அம்மா என்றழைத்து சேயாய் ஓடி வந்தோம் அம்மா அம்மா உனை நினைந்து ஆசையாய் தேடி வந்தோம் வானக அரசின் இராக்கினியே வானோர் போற்றும் பேரழகே வாழ்கவே வாழ்கவே (2) கானாவூரின் திருமணத்தில் துணையாய் அருகிருந்தாய் தானாய் எம்மை அணுகி வந்து அன்பால் அரவணைத்தாய் தூய்மை பொங்கும் நிலவும் நீ வாழ்வை வழங்கும் பெண்மை நீ வாழ்கவே வாழ்கவே (2) |