மாதாபாடல்கள் | பனிமயத்தாயின் புகழ் |
பனிமயத்தாயின் புகழ் பாடுங்கள் பாசத்தில் ஒளிரும் முகம் பாருங்கள் அருள் நிறை தாய் நம்மை அரவணைப்பார் கவலைகள் தீரும் வளமைகள் சேரும் கரம் கூப்புங்கள் கரம் கூப்புங்கள் வானவர் வாழ்ந்தால் வந்தது மகிமை வணங்கியே நின்று பணிந்தது உம் தாழ்மை அடிமையின் உருவில் அடங்கிய எளிமை நிகழ்ந்தவை எல்லாம் நினைவினில் பதித்தால் ஆண்டவன் அருளால் தொடர்ந்தது உன் வலிமை நிகழ்ந்தவை எல்லாம் நினைவினில் பதித்தாய் நிறைமகிழ்வோடு இறைபுகழ் கொடுத்தாய் தாயே உன் தயவில் நான் வாழ்ந்திட என்ன தவம் செய்தேன் அம்மா நிலவின் மேல் நின்ற விண்ணகமலரே பன்னிரு விண்மீன் சூடிய அழகே ஆதவன் தனையே விளைந்த பேரொளியே அலகையின் தலையை மிதித்த அற்புதமே கலங்கிடும் வேளை நம்பிக்கை நீயே கண்ணீர் துடைத்து காத்தருள்வாயே தாயே உன் தயவில் நான் வாழ்ந்திட என்ன தவம் செய்தேன் அம்மா |