Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் நீலக் கடலின் ஓரத்தில்


நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

தென்னை உயர பனை உயர
செந்நெல் உயர்ந்து கதிர் பெருக
மின்னும் தாழை மடல் விரியும்
வேளாங்கண்ணி எனும் ஊராம்

பூவின் மணமும் புதுவெயிலின்
பொலிவும் சுமந்த இளம்தென்றல்
ஆவும் கன்றும் அழைக்கின்ற
அன்பு குரலில் விளையாடும்

பொன்னேர் பிடித்த நல் உழவர்
பூமித் தாயின் அருள் கொண்டார்
தண்ணீர் இன்றி மீனவரும்
தாவும் கடலின் நிதி கண்டார்

தேனும் கலந்த தினைமாவும்
தீரா இன்ப சுவை சேர
மானின் விழியாம் மனைவேணி
மாறா காதல் நெறி நின்றாள்









 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா