Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் நீயே எந்தன் அடைக்கலமே

நீயே எந்தன் அடைக்கலமே
உன்னையன்றி எனக்கேது சொந்தமே 2

நீயே எந்தன் அடைக்கலமே
உன்னையன்றி எனக்கேது சொந்தமே 2
உன் பாதையில் உன் வழியில் - 2
கரம் பிடித்து நடத்திடுமே....... அம்மா
தாயே மரியே தஞ்சமென்று நம்பி வந்தேன்

மனுக்குலம் எடுத்து மரியான தாயே
வாழ்வினை மறந்து கன்னியான தாயே - 2
இயேசுவை சுமந்த தாயே - மாந்தர்க்கு தாயான தாயே - 2
உலகிற்கு தயவாக இருக்கின்ற தாயே
நம்பிக்கை தீபமாய் ஒளிர்ந்திடும் தாயே (உன் பாதையில்)

உலகத்தை மீட்ட இயேசுவின் தாயே
துன்பத்தைத் தாங்கிய வெற்றியின் தாயே - 2
அழிவை அகற்றிய தாயே - வாழ்வை வழங்கிய தாயே - 2
மண்ணில் மனிதத்தை நேசிக்கும் தாயே
எளிமையின் வடிவாய் இருக்கின்ற தாயே (உன் பாதையில்)


 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா