மாதாபாடல்கள் | நம்பிக்கையின் மாதிரியே மரியே |
நம்பிக்கையின் மாதிரியே மரியே - நீ நானிலத்தோர் வாழ்வின் நாயகியே உன்போல் அன்பு உண்மை நீதி வழி நின்று இறைநம்பிக்கையில் வாழ் எமக்கருள்வீர் வாய் நிறைவின் வாழ்த்தினையே உவப்புடனே ஏற்றாய் - அவர் வார்த்தையினை இதயத்தில் உயிர்போலக் காத்தாய் உத்தமனின் பொருளினையே நெஞ்சினிலே நினைத்தாய் புத்துலக கனவாக்கி புகழ் பாடல் இசைத்தாய் வார்த்தையினை நெஞ்சினிலே நினைத்தாய் வாழ்வுக்கோர் புதுப்பாடல் இசைத்தாய் ஆண்டவரின் அடியவள் நான் என்றுரைத்து வாழ்ந்தாய் - உன்னை அவர் பணிக்கே முற்றிலும் நீ அர்ப்பணமே செய்தாய் இறை ஆட்சி தலைமகனின் தாயாகத் திகழ்ந்தாய் நிறைவாழ்வில் வந்திடவே அனைவரையும் நீ ஈந்தாய் தலைமகனின் தாயாகத் திகழ்ந்தாய் தனையனையே உலகிற்காய் ஈந்தாய் |