மாதாபாடல்கள் | மிகவும் இரக்கமுள்ள தாயே |
மிகவும் இரக்கமுள்ள தாயே தூய கன்னி மரியே உந்தன் அடைக்கலம் நாடி வந்து ஆதரவைத் தேடினோம் பரிவோடு மன்றாடினோம் எவரையும் நீர் கைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்து அருள்வாயே கன்னியர்களுக்குள் அரசியான கன்னிகையே அடைக்கலம் தருகின்ற நம்பிக்கை என்னை தூண்டுவதால் நான் உன் திருவடியை நாடி வருகின்றேன் பாவியாகிய நான் உம் திருமுன் துயரத்தோடு உமது இரக்கத்திற்காய் காத்து நிற்கின்றேன் மனுவுருவான திருமகனின் தாயே என் மன்றாட்டை புறக்கணியாமல் கேட்டு அருள்வீராக ஜென்மபாவம் இல்லாமல் உற்பவித்த கன்னிமரியே பாவிகளுக்கு அடைக்கலமே ஆதரவே இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம் எங்கள் பெயரில் இரக்கமாக இருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடி வேண்டிக் கொள்ளும் வார்த்தையே வடிவான இறைமகனின் தாயே என் மன்றாட்டை புறக்கணியாமல் கேட்டு அருள்வீராக இறைவனுடைய மகாபரிசுத்த மாதாவே இதோ உம்முடைய இரக்கத்தை தேடி ஓடிவந்தோம் எங்கள் தேவைகளில் நாங்கள் வேண்டும் பொழுது நீர் என்றுமே பாராமுகமாய் இராதேயும் ஆசீர் பெற்றவளே மோட்சம் நிறைந்தவளே கருணையே வடிவான நித்திய கன்னிகையே அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் எங்களைப் பாது காத்தருளும் |