Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் மரியா நம் பயணத்தின் வழித்துணை

மரியா நம் பயணத்தின் வழித்துணை (2)
வாழ்க மரியே வாழ்க மரியே
மரியே எம் பயயணத்தின்
வழித்துணை எம் வழித்துணை

பயங்கள் சூழ கவலை சேர
பயணம் இங்கே போகிறோம்
பயணம் முழுதும் துணவரவே
தாயே உன்னை வேண்டினோம்
பயணம் பயணம் பெரும் பயணம்
தரணியில் வாழ்க்கை நெடும் பயணம்
தனியே நடந்தால் துயர்ப்பயணம்
தாய் அருகில் இருந்தால் திருப்பயணம்
பயணம் பயணம்
தாய் அருகில் இருந்தால் திருப்பயணம்

முதிய உறவுக்கு உதவிட முனைப்புடன் ஒரு பயணம்
கருவில் கடவுள் மகனையே சுமந்து கவலைப் பயணம்
கொடியவனின் சதியினால் நள்ளிரவில் பயணம் ஆ....ஆ...ஆ..ஆ
கொடியவனின் சதியினால் நள்ளிரவில் பயணம்
துடிக்கும் மகனைத் தேற்றிட சிலுவைப்பாதைப் பயணம்
அன்பு ததும்பும் கண்களினால் அம்மா எங்களைப் பார்த்திடு
அக்கரை சென்று போகும் வரை அக்கரையோடு காத்திடு
அக்கரை கூட்டிச் சேர்த்திடு

தனிமை இருளை வென்றிட துணையைத் தேடி அலைகின்றோம்
துணை வரும் இனியவர் சிலரை உதறி விலகிப் போகிறோம்
புரிதல் இன்றிக் கொதிக்கிறோம் கிடைக்கும் அன்பை இழக்கிறோம்
ஆ....ஆ...ஆ...ஆ
புரிதல் இன்றிக் கொதிக்கிறோம் கிடைக்கும் அன்பை இழக்கிறோம்
இருள் நெருங்கும் வேளையில் துணையை இழந்து தவிக்கிறோம்
அன்பு ததும்பும் கண்களினால் அம்மா எங்களைப் பார்த்திடு
அக்கரை சென்று போகும் வரை அக்கரையோடு காத்திடு
அக்கரை கூட்டிச் சேர்த்திடு

எளிமைப் பாடம் பயின்றிட தொழுவம் பார்க்கப்போவோம்
குடும்ப வாழ்க்கை படித்திட நாசரேத்தூர் போவோம்
அன்னை உம் அக்கறை அறிந்திட கானா ஊருக்கு போவோம் ஆ....ஆ...ஆ...ஆ
அன்னை உம் அக்கறை அறிந்திட கானா ஊருக்கு போவோம்
அன்பை நன்றாய் புரிந்திட கலவாரி மலைக்கு போவோம்
அன்பு ததும்பும் கண்களினால் அம்மா எங்களைப் பார்த்திடு
அக்கரை சென்று போகும் வரை அக்கரையோடு காத்திடு
அக்கரை கூட்டிச் சேர்த்திடு

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா