மாதாபாடல்கள் | மங்கள நிலவே |
மங்கள நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே இறை வழி நின்று விரைந்தெம்மைக் காக்கும் சுகம் தரும் சுந்தரியே - தாயே சுகம் தரும் சுந்தரியே மங்கள நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே வேளாண் நகர் போற்றும் காவியமே வேளையில் துணை நிற்கும் காவலியே வரங்களை பொழியும் வான் மழையே வரும் முன் காத்திட வருபவளே இறை உளம் விளங்கிட உனைத் தந்தாய் மகனையேத் தந்திட எமை மீட்டாய் வழிகளைக் காட்டியே முன் சென்றாய் அவர் வழி நடப்பதே முறை என்றாய் |