மாதாபாடல்கள் | மனசு எல்லாம் மகிழ்ச்சி |
பனிமயத்தாயின் பிள்ளைகளே அன்னையின் எழில் முகம் காண வாருங்களே வருவோர் துயரினையும் திரை சூடும் பதமலர் சேர்ந்திட கூடுங்களே மனசு எல்லாம் மகிழ்ச்சி பொங்க வந்தது நன்நாளே கூடியே வாழும் குவலயமே கொண்டாடத்தானே பனிமயத் தாய் மரியே கவிநூறு தேனமுதே உம்மை நாடிவரும் பிள்ளைகளின் குரல் கேட்பாயே எம்மை ஆதரித்தே அழைக்க வரும் பனிமய அழகே எழில்மிகு எத்தனி மலை வந்த மாமரியே நின்ற இடம் பனிசூழ காட்சி தந்தாயே மலைபோல் துன்பமும் பனியாய் விலகிடுமே அன்னைமுகத்தை கண்டால் போதும் அமைதி பிறக்குமே அருள் மகனை கையினிலேந்திடும் அழகோவியமே தேவைகளில் தேடி வரும் பனிமயமே தாய்மரி நான் சொல்லாமலே ஓடிவருவாய் தீங்கு விலகவே முத்து மணி மாணிக்கமே கொத்து மலர் பூச்சரமே ஆதவனின் ஒளிர் முகமே ஆண்டவன் ஆலயமே மங்கையருள் மாமணியே வினையெல்லாம் தீர்ப்பவளே கருணையைத் தான் முகிலெனவே கடைக்கண் பாராயோ பனி பாசமுருகும் பார்வையாலே வாழவைப்பாயே காடுமேடு கடந்து வந்தோம் கண்ணீர் கவலை மறந்திட - கடும் பஞ்சம் பசி நோய் விலகிட நாளும் வேண்டுவீர் |