Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள்

இலங்கையிலே புகழ் வீசி
விண்ணொளிர மண்ணொளிர
தன் திருமகனைக் கையிலேந்தி
அருளாசி வழங்கும் தேவ அன்னை
மடுத்தாயின் பதம் பக்தர்களே வாருங்களே
சேருங்களே கூடுங்களே

மடுவினிலே காட்சி தந்த மடுத்தாயே
மங்கலமே மாணிக்கமே நின்பதமே
தேடி வருவோர்க்கே வரம் கொடுப்பவளே
தேவனின் சாரோனின் றோஜாவே
மடுத்தாயே எங்கள் மடுத்தாயே (2)

கடல் கடந்து வந்தோம்
காடு மேடு கடந்து வந்தோம்
கவலைகளை மனங்களில் சுமந்து வந்தோம்
சுமைகளை களைந்தோம் அருளாசி தாருமம்மா
மடுத்தாயே எங்கள் மடுத்தாயே (2)

மடுவினிலே பூத்த லீலி புஸ்பமே
முழுநிலவே வைகறையே வெண்மேகமே
பட்ட வாழ்வுக்கே தளிர் கொடுப்பவளே
கடவுள் தந்த முதலரசி நீயம்மா
மடுத்தாயே எங்கள் மடுத்தாயே (2)


பஞ்சம் பசியில் வந்தோம்
பட்டிணிச் சாவில் இருந்தோம்
கெஞ்சிடும் கைகளால் ஏந்துகிறோம்
நெஞ்சிலே ஈரம் பொங்க எங்கள் மடுத்தாயே (2)
அருள்தாரும் அம்மா மடுத்தாயே


கொடுப்பதிலே கருணையே இத்தினமே
காவியத்தின் பேரழகே நீயம்மா
படும்பாடு பட்டோரை குணமளிப்பவளே
படைத்தவன் பரம்பொருளே நீயம்மா
மடுத்தாயே எங்கள் மடுத்தாயே (2)
வாழ்க வாழ்க மரியே
வையகத்தின் அரசியே
அருள் நிறைந்த எம் தாயே நீ வாழ்க

கவலைகளை மனங்களில் சுமந்து வந்தோம்
சுமைகளை களைந்தோம் அருளாசி தாருமம்மா
மடுத்தாயே எங்கள் மடுத்தாயே (2)

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா