மாதாபாடல்கள் | லூர்து அன்னையே தாயே |
லூர்து அன்னையே தாயே எங்கள் பாதுகாவலும் நீயே லூர்து அன்னையே தாயே எங்கள் பாதுகாவலும் நீயே எங்கள் அடைக்கலம் - எங்கள் ஆதரவு எல்லாம் நீயே வாழ்க வாழ்க எம் தாயே - உம் பரிந்துரை தந்தருள்வாயே (2) உம்மை நாடி வந்தோம் - எங்கள் குறைகள் தீர்க்கும் தாயே உம்மைத் தேடி வந்தோம் - எங்கள் கண்ணீர் துடைக்கும் தாயே எங்கள் தஞ்சம் நீயே எங்கள் வாழ்வும் நீயே எங்கள் ஆலயத்தில் குடியிருக்கும் அன்பு அன்னையே வாழ்க லூர்து அன்னையே வாழ்க - எங்கள் லூர்து அன்னையே வாழ்க கருணை உள்ளம் கொண்டு - எங்கள் கவலை தீர்க்கும் தாயே எங்கள் செபங்கள் .......... - என்று முடிவு செய்யும் தாயே யாரும் இல்லை என்று உம்மைத் தேடி வந்தோம் எமக்காக இயேசுவிடம் பரிந்து பேசிடும் தாயே லூர்து அன்னையே தாயே - எங்கள் லூர்து அன்னையே தாயே |