மாதாபாடல்கள் | குடும்ப தீபமே மரியே |
குடும்ப தீபமே மரியே - திருக் குடும்பத்தின் குல விளக்கே கூடி வந்தோம் தாயே - எங்கள் குலமாக வேண்டுவீர் எங்கள் குடும்பத்திலே உம்மை விளக்காய் ஏற்றி வைத்தோம் மங்கலம் விளங்கிடவே நாளும் மன்றாடுவோம் தாயே பெண்களில் சிறந்தவளே மரியே அருள்மழை பொழிபவளே தாயே என்றும் அமைதியிலே எம்மை நாளும் காருமம்மா அன்பு பிறர் நலமாய் இங்கு கனிந்திட வேண்டுமம்மா பண்புடன் மரியாதை எம்மில் எல்லோர்க்கும் அருளச்செய்யும் பெண்களில் சிறந்தவளே மரியே அருள்மழை பொழிபவளே தாயே என்றும் அமைதியிலே எம்மை நாளும் காருமம்மா |