மாதாபாடல்கள் | கொண்டாடுவோம் அன்னை |
கொண்டாடுவோம் அன்னை திருநாளையே மன்றாடுவோம் அன்னை பதம் நாடியே ஒன்றாகுவோம் இங்கே பண்பாடியே - நாம் நன்றாகவே வாழ மன்றாடியே - (2) தீபங்கள் எரிகின்ற ஜோதியிலே - உன் திருமுக தரிசனம் கிடைக்கின்றதே வேதனைகள் சோதனைகள் வீழ்ந்திடவே வேளைநகர் தாயே உம்மை வேண்டுகின்றோம் நெஞ்சமெல்லாம் நெகிழ்கின்ற வேளையிலே நினைவெல்லாம் நீ இருந்து வாழ்ந்திடவே துன்பமெல்லாம் தூர ஓடிப்போகின்றதே - உன் திருநாமம் கேட்கின்ற போதினிலே |