Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் காணார் மலரே கற்பகமே

காணார் மலரே கற்பகமே கருணை வான்முகிலே
தினம் கோடி உன் புகழ்பாட
என் மனம் வேண்டி அழைக்குமே
வினை தானும் அகலுமே
ஆவே.... ஆவே...ஆவே

ஆயிரம் கோடி ஆதவன் ஒளியைத்
தாங்கிய முகமன்றோ
நிறை ஆலயம் மேவியே ஆசனம்
கொண்டவள் அழகுத் தாயன்றோ
பூத்திடும் புன்னகை பூவிதழ் ஓரங்கள்
சொல்லுவ தென்னென்னவோ
உயர் பாசம் உதிரும் உன் பார்வையுமே
எம்மை பாதங்கள் சேர்த்திடவோ - உந்தன்

மங்கை அருள் அதி சுந்தரமே ஜெபமாலை மந்திரமே
திருமந்திர மாநகர் கோவில்
எழுந்த நல் மாணிக்க மகுடமே
அன்புக்கரம் கொண்டு ஆகிய
நாள் முதல் ஆதரவானவளே
அருள் இன்முகம் காட்டி தாயெனக் காத்திடும்
தஸ்நேவிஸ் மாமரியே - திவ்ய











 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா