மாதாபாடல்கள் | கடலோரத்தில் சுடர்விடும் |
கடலோரத்தில் சுடர்விடும் ஒளியே வேளாங்கன்னிகையே உந்தன் ஆலய மணியின் ஓசை கவி பாடுமே தாயே தாயே இன்று நான் குரல் கொடுக்க தாயே தாயே இன்று உன் பதில் கிடைக்க மீண்டும் மீண்டும் உன்னை போற்றிட புகழ்ந்திட என் மனம் துடிக்குதம்மா மண்ணில் வாழ்வோரில் கெட்ட தீயோரை உன் கரம் கொண்டு நீ தொடுவாய் இன்று அன்போடும் நல்ல பண்போடும் எம்மை காப்பாற்றி அழைத்துச் செல்வாய் எங்கள் கவலை நீங்க எங்கள் குறைகள் நீங்க உந்தன் அருள் வேண்டும் கன்னி மரியே உந்தன் புகழ் பாடுவோம் தினம் தினம் பாடுவோம் அதை நீ கேளும் அன்னை மரியே மனம் தினம் பாடி ஜெபித்திடுமே புயல் வீழ்ச்சியிலும் அலை கோபத்திலும் வெளிநாட்டோரின் உயிர் காத்தாய் நொண்டி பையன் என்று ஊர் கேலி செய்யும் அவன் கை பிடித்து நடக்கச் செய்தாய் திருக்காட்சி பற்றி இந்தச் சாட்சி சொல்லும் இதை ஒருநாளும் நாம் மறவோம் மதம் தேவையில்லை இனம் தேவையில்லை உந்தன் திருமுகத்தைக் காண்பதற்கே தினம் பொற்பாதம் வணங்கிடுவோம் |