மாதாபாடல்கள் | இரக்கம் நிறைந்த இராக்கினியே |
இரக்கம் நிறைந்த இராக்கினியே நீர் வாழ்க எங்கள் வாழ்வின் தஞ்சமே நீர் வாழ்க 2 நீர் வாழ்க! அன்னையே வாழ்க மரியே வாழ்க, வாழ்க வாழ்க உலகில் வாழும் மக்களெல்லாம் உம்மை மண்டியிட்டு வேண்டுகின்றோம் எங்கள் கண்ணீர் துயர் துடைத்தீர் நாங்கள் நிம்மதி அடைந்து விட்டோம். எமக்காய் ஜெபிக்கும் எம் தாயே உம் திருக் கண்கள் எமை நோக்கும் உம்மால் வாழும் மக்கள் எல்லாம் உம் நம்பிக்கையில் வாழ்ந்திடுவோம் - 2 அன்னையும் எங்கள் அரசியும் நீர் எம் இதயத்தில் குடியிருப்பாய் இறைவன் வார்த்தைக்கு செவிமடுப்போம் நீர் எமக்காக வேண்டும் அம்மா!! - 2 |