மாதாபாடல்கள் | இரக்கம் நிறைந்த தாயே |
இரக்கம் நிறைந்த தாயே (2) உம் அடைக்கலமாய் ஓடி வந்தோம் கன்னியர் அரசி நீயே தயையுள்ள தாயே அமலோற்பவ மாதாயே பாவிகள் அடைக்கலம் இரக்கம் நிறைந்த தாயே (2) இரக்கம் நிறைந்த தாயே உம் அடைக்கலமாய் ஓடி வந்தோம் உமது உதவி இரங்கி பரிந்துரை கேட்ட எவரும் கைவிடப் பட்டதாய் நாங்கள் உலகில் ஒருபோதும் கேட்டதில்லை இரக்கம் நிறைந்த தாயே (2) இரக்கம் நிறைந்த தாயே உம் அடைக்கலமாய் ஓடி வந்தோம் கைவிடா உம்மை நம்பி - உம் திருவடி தேடி வந்தோம் எம்மழுகை கருணை வேண்டி மன்றாட்டை ஏற்றருளும் இரக்கம் நிறைந்த தாயே (2) இரக்கம் நிறைந்த தாயே உம் அடைக்கலமாய் ஓடி வந்தோம் தாயாரே (2) ஆண்டவளே (2) மாதாவே (4) |