மாதாபாடல்கள் | என் ஆன்மா இறைவனையே |
என் ஆன்மா இறைவனையே ஏற்றிப் போற்றியே மகிழ்கின்றது என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது 1. தாழ்நிலை இருந்த தம் அடியவரை தயையுடன் கண்கள் நோக்கினார் இந்நாள் முதலாம் தலைமுறைகள் எனைப் பேறுடையாள் என்றிடுமே 2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார் அவர்தம் பெயரும் புனிதமாகும் அவருக் கஞ்சுவோர்க் கிரக்கமாகும் 3. கரத்தின் வல்லமை கொண்டே அவர் செருக்குற்றோரை சிதறடித்தார் வலியவர் அரியணை நின்று விழ தாழ்ந்தவர் தம்மை உயர்த்தி விட்டார் 4. பசித்தவர் தமக்கு நலமீந்து செல்வரை வெறுமையாய் அனுப்பி விட்டார் முன்னோர் தமக்கு உரைத்தது போல் ஆபிரகாமும் சந்ததியும் 5. இரக்கம் பெறவே என்றென்றும் இஸ்ராயேல் மக்களை ஆதரித்தார் தந்தை திருமகன் ஆவியரும் என்றும் மகிமை பெற்றிடவே |