Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் என் ஆன்மா ஆண்டவரை

என் ஆன்மா ஆண்டவரை ஏற்றியே போற்றிடுதே
மீட்பராம் கடவுளை நினைத்து இதயம் களிகூருதே

தாழ்நிலை நின்றவளை கண் நோக்கினார்
தகுதியில்லாதவளை விண் தூக்கினார்
பேறுடையாள் எனவே மண் போற்றுவார்
விண்ணவன் தாயெனவே எனை வாழ்த்துவார்

வல்லமை மிக்கவர் அரும் பெரும் செயல்கள்
எனக்குப் பல புரிந்தார் - 2
அவரிடம் அஞ்சுவோர்க்கு இரக்கமே பரிசாகும் - 2
நெஞ்சிலே செருக்குற்றோரை சிதறவே அடித்திடுவார் - 2
பசித்தோரை நிரப்புகிறார் தாழ்ந்தோரை உயர்த்துகிறார்

அவர்தம் பெயரும் புனிதம் பெறவே
இறைவன் வாழ்ந்திடுவார் - 2
தலைமுறை தலைமுறையாய் அன்புறவு வழியாகும் - 2
எளியோரை அரியணை நின்று அகற்றியே விரட்டிடுவார் - 2
அடியவனார் இஸ்ராயேலை இரக்கத்துடன் ஆதரித்தார் - 2








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா