மாதாபாடல்கள் | எழில் கொஞ்சும் வேளை நகரில் |
எழில் கொஞ்சும் வேளை நகரில் இறை மைந்தன் இயேசுவோடு அருள் தந்து எம்மைக் காக்கும் ஆரோக்கிய அன்னை நீயே அருள் மேவும் காட்சி அளிக்கும் ஆரோக்கிய அன்னையே எம் வாழ்விலே ஒளிச் சுடராய் நீ நிறைந்திடுக வரங்கள் தரும் அன்னையே பூவிரி சோலைகள் சூழ்ந்திடும் வேளைநகர் நாயகியே வீசும் தெனறல் காற்றினைப்போல் வேண்டும் வரங்கள் தருபவளே வான் சுடரே தினம் தினம் அருள்மழை பொழிவாயே அகிலமெல்லாம் நலம் பெருக வரங்கள் தரும் அன்னையே துன்பம் என்னை சூழுழ்கையில் துணை செய்வதுன் அருட்கரமே முடவன் நடந்திட நலம் அளித்தாய் கடலின் சீற்றத்தில் காத்து நின்றாய் வான் மலரே தாய்மரியே திருத்தலம் வந்தோம் நடை வழியாய் அடியவரின் துயர் துடைப்பாய் வரங்கள் தரும் அன்னையே |