மாதாபாடல்கள் | எழில் பொங்கும் ஓவியமே |
எழில் பொங்கும் ஓவியமே என் இதயக் காவலியே காலம் போற்றும் கார்மேல் அன்னையே - புது கானப்பூக்கள் தூவி வாழ்த்துவோம் (2) வாழ்க அம்மா....... வாழ்க தாயே........ காலமெல்லாம் வாழ்க வாழ்கவே (2) இதோ உமது அடிமை என்று இதயம் பணிந்து உதயம் சுமந்து மீட்பின் ஆலயமானார் மகிழ்வின் காரணமானார் (2) அருளின் நிறைவே பணிவின் உருவே நிலவின் நிறைவே உன் கார்மேல் அன்னையே வாழ்க அம்மா....... வாழ்க தாயே........ காலமெல்லாம் வாழ்க வாழ்கவே (2) மாடம் காக்க மௌனம் காத்து சிலுவைச் சிறகை சுகமாய் சுமக்க துணையாய் நின்றவளே அன்பின் பரிசை ஈந்தவளே (2) உதவும் கரமே என் உத்தரியத் தாயே புதுமைப் புகழே புகழாரம் நீயே (2) வாழ்க அம்மா....... வாழ்க தாயே........ காலமெல்லாம் வாழ்க வாழ்கவே (2) |