Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் ஏழை எங்கள் குரலை


ஏழை எங்கள் குரலை இதயத்தால் கேட்டு
அருளால் நிறைக்கும் ஆரோக்கியத்தாயே
உம்மை நாடி வந்தோம் அடைக்கலம் நீ
கருணையின் வடிவே அன்புத்தாயே
மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (2)

வான்நோக்கி உன்கொடி உயர்வதுபோல் - எங்கள்
செபத்தினை விண்ணகம் சேர்த்திடுவாய்
கதியென்று உன் பாதம் நாடி வந்த - எம்மைக்
கைவிடாமல் கரை சேர்த்திடுவாய்
உனையன்றி எமக்காக உலகில் வேறு யாரம்மா
வருகின்றேன் உன்னடி வேளைத்தாயே
விண்ணகத்தின் வாயிலே மண்ணகத்தின் விடிவெள்ளியே
என்னகத்தில் வாரும் தாயே
எளியோர் எங்கள் விடுதலையே
வறியோர் எங்கள் பொற்கிளியே
எளியோர் எங்கள் மேன்மையே
குறை தீர்க்கும் தாய்மரியே
எமக்காக வேண்டிக்கொள்ளும்
அருள்சேர்க்கும் அன்புத்தாயே
எமக்காக வேண்டிக்கொள்ளும்

வேளைநகரின் வீதியிலே பவனி வரும் ஆரோக்கியமே
பாவி எங்கள் உள்ளங்களில் குடி கொள்ளும் வேளைத்தாயே
வங்கத்தின் கடலோரம் பெசன்ட் நகர்தனிலே
அருள் செய்யும் ஆதாரமே
துன்பத்தால் பரிதவிக்கும் பிள்ளைகளின் வாழ்வை
கரை சேர்க்கும் ஓடம் நீயே
ஆரோக்கிய மாதாவே எங்களைக் காப்பாய் நீயே
திரு அவையின் மாதாவே எம் துணை வாராய் நீயே
எங்களின் மாதாவே இரக்கத்தின் அன்னையே
விண்ணோர் மண்ணோர் வாழ்த்திப் போற்றும் நிறையருளே
குறை நீக்கும் தாய்மரியே
எமக்காக வேண்டிக்கொள்ளும்
அருள்சேர்க்கும் அன்புத்தாயே
எமக்காக வேண்டிக்கொள்ளும்
எமக்காக வேண்டிக்கொள்ளும்
எமக்காக வேண்டிக்கொள்ளும்
எமக்காக வேண்டிக்கொள்ளும்

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா