மாதாபாடல்கள் | அற்புதம் நிறைந்த அன்னையே |
அற்புதம் நிறைந்த அன்னையே ஆண்டவர் இயேசுவின் தாயே அவனியோர் போற்றிடும் அன்னையே எங்கள் அன்பின் காவலியே கருவினில் இயேசுவைக் சுமந்து கடவுளின் திருவுளம் நடந்தவளே தூயவர் உள்ளமே கொண்டு தூதரின் வாழ்த்துரை ஏற்றவளே வானவர் புகழ மண்ணகம் மகிழ இறைவனை ஈன்றவளே அம்மா உம்மையே புகழுகின்றோம் அன்பும் அமைதியும் ஈந்து இறைவழி தொடர அழைப்பவளே பண்பும் பாசமும் பொழிந்து உலகிலே எம்மை அணைப்பவளே சோர்ந்திடும் வேளையில் துயரினில் மூழ்கையில் துணையாய் வருபவளே அம்மா உன்புகழ் பாடுகின்றோம் |