மாதாபாடல்கள் | அருள்நிறை மரியே நீ |
அன்னையே ஆரோக்கியத் தாயே அடியவரை அரவணைத்து ஆட்கொண்டாயே புதுமை பல புரிந்து அருள் மாரி பொழிந்து எங்களை என்றும் வாழவைத்தாயே அன்னையே நீ வாழ்க ஆரோக்கியத் தாயே நீ வாழ்க அருள்நிறை மரியே நீ வாழ்க ஆண்டவர் உம்முடன் நிதம் வாழ்க பேறுடை பெண்ணே நீ வாழ்க மனுக்குலப் பெருமையே நிதம் வாழ்க ஓடி வந்தோம் தாய் மரியே கோடி நன்மை புரிபவளே நன்றி கூற நாடி வந்தோம் கண்ணீர் பெருக பாடி நின்றோம் அன்புக் கடலாய் நீயிருக்க அருளின் கரையாய் உன் மகனிருக்க வாழ்வில் தோணிகள் பயணம் வரும் விண்ணக வாழ்வில் கரைசேரும் கரைசேரும் இருபத்து ஐந்து ஆண்டுகளாய் இறைவன் ஆசி பெருகியதே தாயைக் தந்த இறைவா வாழி தாயின் அன்பு தினமும் வாழி தினமும் வாழி |