மாதாபாடல்கள் | அருள் நிறை மரியே |
அருள் நிறை மரியே லூர்தன்னையே நிரந்திரம் எம் வாழ்வில் கலந்தவளே எங்கள் மகிழ்வின் காரணமே அன்னையே ஆறுதல் லூர்தன்னையே தலைமுறை தலைமுறையாய் எம்மோடு வாழ்பவளே எங்கள் உள்ளங்களை வென்றவளே உம்மை அண்டி வந்தோம் குறைகளை களைபவளே உன் பதம் சரண் அடைந்தோம் உயிர்களைக் காப்பவளே உமை நாடினோம் சுமை தீர்ந்திடும் அருள்மரியே எங்கள் அன்னையே அகிலம் போற்றும் தாய் மரியே கரங்கள் விரித்து எந்தன் கண்ணீரைத் துடைப்பவளே கடவுளின் கருவறையே சன்னதியே எம்மை வளங்களினால் என்றும் நிறைப்பவளே ஞாலம் நலன் பெறவே கதி தரும் நாயகியே உமை நாடினோம் சுமை தீர்ந்திடும் அருள்மரியே எங்கள் அன்னையே அகிலம் போற்றும் தாய் மரியே |