மாதாபாடல்கள் | அருள் நிறை அன்னை |
அருள் நிறை அன்னை மாமரியே - நாங்கள் இயேசுவின் சீடராய் வாழ்ந்திடவே நல்லாசீர் அடைந்து எம்மைப் பணிவாழ்வில் இணைந்திட அருளுமம்மா ஆகட்டும் என்றாய் அடிமை நான் என்றாய் ஆண்டவர் இயேசுவின் முதல் சீடர் ஆனீர் உதரத்தில் கருவேற்கும் அன்பே - நீர் உள்ளத்தின் வார்த்தையை ஏற்றாய் நசரேத்தில் பணியினைத் தொடங்கி நாள்தோறும் ஊழியம் செய்தாய் கல்வாரியில் சிலுவையினால் சீடத் தன்மையை விளங்கச் செய்தாய் சிலுவையும் மகிமையும் சீடரின் வாழ்வில் சேர்ந்தே வந்திடும் என்பதனை உந்தன் வாழ்க்கை சாட்சியினாலே உணர்ந்திடச் செய்தாய் வலுப்பெறச் செய்தாய் ஊழிய வாழ்வினிலே உமைப்போல் சாட்சியாய் வாழ எமக்காய் உன் மகன் இயேசுவிடம் என்றும் பரிந்து பேசிடுவாய் |