மாதாபாடல்கள் | மழலை வளம் தரும் |
மழலை வளம் தரும் மங்கல நாயகியே தேவ திருக்குமாரனின் ஜீவ மாதாவே அழுது கலங்கி வந்தே அரவணைப்பாயே அருந்தவம் புரிந்து நின்றோம் ஆதரிப்பாய் நீயே.......... அருள் நிறை மரியே ஜீவமாதாவே எங்கள் காவலியே எம் குரல் கேட்டு எம் குறை தீர்க்க எமக்காய் மன்றாடுவீர் இயேசுவை மன்றாடுவீர் கானாவூர் திருமணத்தில் கனி ரசம் தந்தவளே - எங்கள் கண்ணீர் துடைத்திடவே எம் ஊர் அமர்ந்தவளே உம்மை நாடி ஓடிவந்தோம் உமதருள் தேடி வேண்டி நின்றோம் மழலை வரம் தந்து மனம் குளிரச் செய்வாய் மடியேந்தி வருகின்றோம் மங்கள நாயகியே புதுமைகள் செய்திடுவாய் பூரண மாதாவே தாழ்வு உள்ளம் கொண்டோம் நாம் தாழ்மையை எமக்கு தருவாயம்மா தரணியைப் போற்றும் ஜீவத்தாயே |