மாதாபாடல்கள் | அருள்மரியே உன் |
அருள்மரியே உன் திருமுகத்தை அருகினில் கண்டு எனை மறந்தேன் அருளால் நிறைந்த மரியே - உம் அருளைப் பொழிந்து காத்திடுவாய் வாழ்க எம் மரியே மரியே நீ வாழ்க Ave Maria Ave Maria - Ave Maria Ave Maria - Ave Maria Ave Maria இதோ உன் விருப்பமென்றாய் தாயே இறைவனுக்கே தாயானாள் இதோ உன் அடிமை என்றாள் மீட்புக்கு நீ வழியானாய் என்னைக் காக்கும் தாயே எனக்கு சுகம் தருவாயே ஆரோக்கியத் தாயே அரவணைப்பாய் - 2 வாழ்க எம் மரியே மரியே நீ வாழ்க இதோ உன் தாயென்றாய் எமக்கு நீர் தாயானீர் இதோ உன் மகனென்றாய் என்னை நீர் ஏற்றுக் கொண்டீர் என்னைத் தாங்கும் தாய் நீயே எனக்கு துணை வருவாயே ஆரோக்கியத் தாயே அரவணைப்பாய் - 2 வாழ்க எம் மரியே மரியே நீ வாழ்க |