மாதாபாடல்கள் | அன்பின் தீபமே |
விண் மீன்கள் பன்னிரண்டை முடியாகக் கொண்டவளே பிறைதன்னை திருப்பாத அணியாக அணிந்தவளே வானவரைக் கருத்தாங்கி வானளாவ உயர்ந்தவளே வானவெளி வாழ்கின்ற பரிந்துரையின் நாயகியே வாழிய நீ மாதாவே வணக்கத்தின் மாதாவே............ அன்பின் தீபமே வாழ்வின் வேதமே அன்னை பாதமே சரணடைந்தோம் - 2 மாண்பின் கீதமே வானநாதமே அன்னை போதுமே சரணடைந்தோம் - 2 தாழ்மை அழகே மேன்மை புகழே தேவமரியே சரணடைந்தோம் ஆவே மரியா ஆவே மரியா ஆவே மரினூ ஆவே மரியா ஆவே மரியா ஆவே மரியா வாழ்வே நீயே ஆவே மரியா கானாவூரில் நிரம்பி வழியும் ரசத்ததில் காண்பேன் அன்பினை உமது அடியேன் என்று பணியும் குரலில் கேட்பேன் அன்பினை காணோம் என்றே தேடித்திரியும் விழியில் காண்பேன் அன்பினை சிலுவையடியில் குருதிக் கரையில் வலியில் காண்பேன் அன்பினை அன்னை என்பது அன்பின் தொடக்கம் அன்னை அன்பில் அகிலம் அடக்கம் பிறரின் நன்மை வாழ்வின் தொடக்கம் பரமன் கரத்தில் அனைத்தும் அடக்கம் ஆவே மரியா ஆவே மரியா ஆவே மரினூ ஆவே மரியா ஆவே மரியா ஆவே மரியா வாழ்வே நீயே ஆவே மரியா புதுமை புரியும் கதைகள் வழியே வியந்து பார்ப்பேன் அன்பினை பதுவைபோலே இதழ்கள் விரிக்கும் சிரிப்பில் காண்பேன் அன்பினை விரலகள் வழியே மணிகள் நகர்த்தும் ஜெபத்தில் அறிவேன அன்பினை உலகம் முழுதும் எதிர்த்து வரினும் உன்னில் காண்பேன் அன்பினை கருவில் திருவை சுமந்த உருவை உன்னில் அவரை வளர்த்த மரியே உனது அன்பை மரிக்கும் வரையே மறுப்பதில்லை வாழ்வின் ஒளியே |