மாதாபாடல்கள் | அன்னையே லூர்து மாமரியே |
அன்னையே லூர்து மாமரியே தேடிவந்த மானிடரை உம் கரம் நீட்டி அழைத்தாயே பாருலகில் பாரோர்க்கு புதுமை பல புரிந்தாயே ஆதரித்து எம் குறையை தீர்த்திடுவாய் நீயே அன்னையே எம் லூர்து மாமரியே கோடி கோடி மாந்தருக்கு வாழ்வளிக்கும் தாயே தேடி உம்மை நாடுவோருக்கு தெம்பளித்தாய் நீயே அன்னையே எம் லூர்து மாமரியே - 2 இறைவனுக்கு நீர் அன்னையாக உருக்கொடுத்து உயர்ந்துவிட்டாய் மானிடர்க்கு நல் வரமாக இயேசுவை உவந்து தந்தாய் 2 இனி எந்நாளும் என் வாழ்வில் துயரமில்லையே உம் பரிவாலே என் இதயம் சுகமாகுமே 2 நானிலத்தில் நல் மாந்தர்களின் நம்பிக்கையாய் ஒளிர்கின்றாய் வானுலகில் பேரரசியாக மாட்சியுடன் ஜொலிக்கின்றாய். வேண்டி வரும் பக்தர்களின் குரல் கேட்டிடும் உம் நீங்காத பரிந்துரையால் நலம் வாழ்வேன் உம் நீங்காத பரிந்துரையால் நலமாய் வாழ்வேன். |