மாதாபாடல்கள் | அன்னை மரியே! |
அன்னை மரியே! அன்பின் தாயே ! உம்மை வணங்குகின்றோம் அமலனின் தாயே! ஆரோக்கிய அன்னையே ! உம்மை துதிகின்றோம் உதரத்தில் ஈன்ற இறைவன் மகனை உலகிற்கு அளித்தாயே அம்மா மரியே வாழ்க வாழ்க வாழ்க அருள் நிறை மரியே வாழ்கவே என்ற வாழ்த்தினை நீயும் பெற்றாயே அப்படியே ஆகட்டும் என்று இறைவனின் விருப்பத்தை ஏற்றாயே அழகு மகனையே ஐயிரண்டு திங்கள்... அழகு மகனையே ஐயிரண்டு திங்கள் தாங்கி ஈன்றாயே அம்மா மரியே வாழ்க வாழ்க வாழ்க மகனின் பாடுகள் உயிரை உறக்க உள்ளம் துவண்டாய் மா மரியே குருதி வழிய சிலுவையில் தொங்கிய மகனைக் கண்டாய் மாமரியே உயிரை துறந்த மகனின் உடலை ஏந்தி துடித்தாயே மகனின் தியாகத்தை மனதோடு ஏற்று பெருமிதம் நீ கொண்டாயே அம்மா மரியே வாழ்க வாழ்க வாழ்க |