மாதாபாடல்கள் | அன்னை மரியே நீர் எமக்கு |
கடலளவானாலும் மயங்காது கையளவானாலும் கலங்காது விசுவாசம் எங்கும் மாறாது விளைவுகளை எண்ணி பின் வாங்காது அன்னை மரியே நீர் எமக்கு நம்பிக்கை வாழ்வின் ஒளி விளக்கு (2) வாழ்க வாழ்க மரியே - யாம் வணங்கும் தேவ அன்னையே (2) கணவனை அறியாக் காலத்திலே கடவுளின் மகனை ஈன்றெடுத்தாய் கனவிலும் நினையாக் காரியத்தை கடவுளை நம்பி ஏற்றுக் கொண்டாய் அன்னைமரியே உன்னைப்போல நம்பிக்கை கொள்ள துணை புரியும் நாளும் பொழுதும் புதுமையம்மா நலம் தரும் உந்தன் திருத்தலத்தில் உம்மை நம்பிய யாவருமே உள்ளும் புறமும் நலமடைந்தார் அம்மா உந்தன் புதுமைகளால் ஆரோக்கியச் செல்வம் அடைந்தோமே |