Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அன்னை மரியாம் மாதாவுக்கு
அன்னை மரியாம் மாதாவுக்கு
மங்களம் பாடிடுவோம்
நாம் இந்த வேளையில் ஒன்றாய் கூடி
வாழ்த்திப் போற்றிடுவோம்

அருள் நிறைந்த அம்மணி
அகிலம் போற்றும் நாயகி
ஆண்டவனின் அன்புத்தாயும் நீ
எங்கள் அன்னையே
ஆண்டவனின் அன்புத்தாயும் நீ
காத்திடும் எங்கள்

அமல உற்பவம் நீ அன்றோ
அடைக்கலமும் நீ அன்றோ
அகிலம் ஆளும் தேவதாயும் நீ
எங்கள் அன்னையே
அகிலம் ஆளும் தேவதாயும் நீ
காத்திடும் எங்கள்

துன்பத்தில் துணை நீயன்றோ
துயரம் துடைக்கும் தாயன்றோ
தூய்மை என்னும் லீலி மலரும் நீ
எங்கள் அன்னையே
தூய்மை என்னும் லீலி மலரும் நீ
காத்திடும் எங்கள்


 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா