Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் ஆன்மீகப் பணியகமே

ஆன்மீகப் பணியகமே பிரான்ஸின்ஆன்மிகப் பணியகமே
பிரான்ஸ்சின் ஆன்மிகப் பணியகமே
எம்மை வருக வருகவென அரவணைக்கும் ஆன்மிகப் பணியகமே -2
புனித ஒப்புரவுத்தாயே எங்கள் காவல் தாயவளே
எம்மை கரம் பிடித்து வழிநடத்தும் தாயே தூயவளே-2

அகதிகளாக அலைந்து நாங்கள் தஞ்சம் தேடினோம்
அரவணைத்தாயே எங்கள் அன்பின் பணியகமே-2
தேடிவந்து அரவணைத்து தேற்றி எம்மைத் தாங்கினாயே
ஓடிவந்து குருக்கள் மூலம் ஆன்ம வாஞ்சை தீர்த்தாயே -2
வாடிநின்றால் வழிகள் சொல்லி வழி நடத்திடுவாயே -2
நாடி உன்பதமே என்றும் நாம் வளர்வோமே-2
புனித ஒப்புரவுத்தாயே ..-2
ஆன்மிகப் பணியகமே.1

கவலைகளாலே நிலைகுலைந்து சிதறிப்போனோமே
கருணையினாலே கரங்கள் தந்த அருளின் பணியகமே -2
இருளகற்றி ஒளிகொணர்ந்து வழிவகைகள் காட்டினாயே
இறையன்பை எமக்குணர்த்தி இனிமையாக நடத்தினாயே-2
ஒதுங்கி நின்றால் உறவாக அருகில் என்றும் அணைப்பாயே-2
ஒருமனதாய் பணியகமாய் இணைந்து பாடிடுவோம் -2
புனித ஒப்புரவுத்தாயே-2
ஆன்மிகப் பணியகமே..-1





 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா