Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் ஆண்டவரை எனதுள்ளம் போற்றி
ஆண்டவரை எனதுள்ளம் போற்றி மகிழ்கின்றது
என் மீட்பராம் இறைவனை போற்றி புகழ்கின்றது
போற்றி புகழ்கின்றது - 2

அடிமையின் நிலையை கண்ணோக்கினார்
செருக்குற்றோரை சிதறடிக்கின்றார்
வல்லவர் அரும்பெரும் செயல்கள் புரிந்துள்ளார்
தூயவர் அவரது பெயரே
அஞ்சி நடப்போர்க்கெல்லாம் இரக்கம் காட்டுகின்றார்
அவர் தம் தோள் வலிமையை காட்டியுள்ளார்

வலியோரை தூக்கி எறிந்தார்
தாழ்ந்தோரை உயர்த்துகின்றார்
பசித்தோரை நலன்களால் நிரப்பியனார்
செல்வரை சிதறச் செய்தார்
என்றென்றும் இரக்கத்தையே நிறைவாய் பொழிகின்றார்
அவர்தம் மக்களின் துணையாய் உள்ளார்











 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா