Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அன்னை மரியே எங்கள் அன்புத் தாயே
அன்னை மரியே எங்கள் அன்புத் தாயே
எங்களுக்காய் பரிந்து பேசுங்கம்மா

அருள் மிகப் பெற்றவரே நீர் வாழ்க
அன்னை மரியே எங்கள் அன்புத் தாயே
எங்களுக்காய் பரிந்து பேசுங்கம்மா

அர்ப்பணமலரே நீர் வாழ்க  அன்னை மரியே.......
திருவுளம் நம்பிய நீர் வாழ்க  அன்னை மரியே.......
திருமகன் தாயே நீர் வாழ்க  அன்னை மரியே.......


பன்னிரு விண்மீன் புனைந்தவரே அன்னை மரியே.......
வெண்ணிலவை பதம் அணிந்தவரே அன்னை மரியே.......
பொன்னொளி சூரியன் போன்றவரே அன்னை மரியே.......
கன்னிமை நிறைந்த அன்னையே  அன்னை மரியே.......


தூய நல் ஆவியின் ஆலயமே அன்னை மரியே.......
தூதர்கள் வாழ்வில் அருந்துணையே அன்னை மரியே.......
மாந்தரில் சிறந்த மாணிக்கமே அன்னை மரியே.......
மாதா மரியே அருட்கரமே அன்னை மரியே.......


பரிசுத்த ஆவியால் நிறைந்தவரே அன்னை மரியே.......
பரிசுத்த இறைவனைப் புகழ்ந்தவரே அன்னை மரியே.......
பரிசுத்த வாழ்வால் உயர்ந்தவரே அன்னை மரியே.......
பரிசாக இயேசுவை ஈன்றவரே அன்னை மரியே.......


இயேசுவை ஈன்று வளர்த்தவரே அன்னை மரியே.......
இயேசுவின் பாதையில் நடந்தவரே அன்னை மரியே.......
இயேசுவின் சிலுவையில் கலந்தவரே அன்னை மரியே.......
இயேசுவின் உயிர்ப்பில் மலர்ந்தவரே அன்னை மரியே.......


வார்த்தைக்கு பணிந்து உயர்ந்தவரே அன்னை மரியே.......
வார்த்தையை தியானம் செய்தவரே அன்னை மரியே.......
வார்த்தையில் வாழ்வை வகுத்தவரே அன்னை மரியே.......
வார்த்தையில் வாழ்ந்து நிலைத்தவரே அன்னை மரியே.......


ஆண்டவர்க்கு அடிமை ஆனவரே அன்னை மரியே.......
அனைவருக்கும் தாயாய் உயர்ந்தவரே  அன்னை மரியே.......
வேண்டிடும் யாவர்க்கும் தருபவரே அன்னை மரியே.......
வேளை நகரின் தாய்மரியே அன்னை மரியே.......


தியாகத்தின் தாயே திருமரியே அன்னை மரியே.......
பிறருக்காய் வாழ்ந்த பேரன்பே அன்னை மரியே.......
சோகத்தை வென்ற சுடரெளியே அன்னை மரியே.......
யாவர்க்கும் உதவும் பரிந்துரையே அன்னை மரியே.......


விடுதலை கீதம் இசைத்தவரே  அன்னை மரியே.......
விவிலியம் போற்றும் இறையன்னையே அன்னை மரியே.......
விடியா வாழ்வின் நம்பிக்கையே அன்னை மரியே.......
அடியோர்க்கருளும் எம் அன்னையே அன்னை மரியே.......


துன்புறுவோரின் தேற்றரவே அன்னை மரியே.......
அன்புரு இயேசுவில் இணைப்பவரே அன்னை மரியே.......
எண்ணிறை புதுமைகள் புரிபவரே அன்னை மரியே.......
எம் குறை தீர்த்து அருள்பவரே அன்னை மரியே.......

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா