மாதாபாடல்கள் | அமுதான தமிழில் |
அமுதான தமிழில் அம்மா உனைப் பாட அன்போடு வந்தோம் பிள்ளைகள் நாங்கள் தெய்வம் தெரிந்தவளே தேவலோகம் வாழ்ந்தவளே தேடி வருவோரின் தேற்றரவே தாய்மரியே மலைச் சார முகமெடுத்து உன் வாசம் முகர்தெடுத்து மலையோரக் குளிரெடுத்து இதழோரம் பாவெடுத்து மணவாசம் திறந்து வைத்து உன் பேரை எழுதி வைத்து மரியே நீ வரவே காத்திருந்தோம் இமையோரம் பூத்திருந்தோம் மரியே வாழ்க - மரியே வாழ்க மரியே வாழ்க - மரியே வாழ்க வானவில்லை வளைத்தெடுத்து வான் முகிலை துடைத்தெடுத்து மேகம் திறந்து மின்னலொடித்து வசந்தகால மலர் தொடுத்து மனவாசல் திறந்து வைத்து உன் சாயல் வரைந்து வைத்து மரியே நீ வரவே காத்திருந்தோம் விழியோரம் பூத்திருந்தோம் மரியே வாழ்க - மரியே வாழ்க மரியே வாழ்க - மரியே வாழ்க |