Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அம்மா அம்மா உனைப் பார்த்தேன்
அம்மா அம்மா உனைப் பார்த்தேன்
தாயே உன்னிடம் சரணடைந்தேன்
கண்ணீர் கவலை மறந்துவிட்டேன்
நீயே துணையென வந்துவிட்டேன்
எனக்கே எல்லாம் நீ தானே
என்றும் தஞ்சம் நீ தானே

அருள் நிறைமரியே ஆண்டவர் தாயே
நான் உன் மகனல்லவா
ஆகட்டும் என்ற அகிலத்தின் தாயே
நான் உன் மகளல்லவா
உன்னால் தானே உயிர் வாழ்கிறேன்
உன்முகம் பார்த்தே உறவாகினேன்
நீயின்றி எனக்கு வாழ்வேது
உன் அருளின்றி எனக்கு வழியேது

பலமுறை முயன்றேன் செயல்களில் தோற்றேன்
இழிவைத் தினம் அடைந்தேன்
தனிமையில் தவித்தேன் பிழைபல புரிந்தேன்
வருத்தம் பல அடைந்தேன்
உன்கோவில் வந்தேன் நலமாகினேன்
உன் பாதம் சேர்ந்தேன் நலமாகினேன்
நீயின்றி எனக்கு வாழ்வேது
உன் அருளின்றி எனக்கு வழியேது

கண்ணீர் துடைத்து கவலைகள் ஒழித்து
புதுமை புரிந்தாயே
கேட்டதை எல்லாம் அள்ளியே கொடுத்து
வளமை தந்தாயே
உன்னிடம் கேட்டேன் நிறைவாகினேன்
உன்னருள் மழையில் வரமாகினேன்
நீயின்றி எனக்கு வாழ்வேது
உன் அருளின்றி எனக்கு வழியேது




 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா