மாதாபாடல்கள் | அம்மா மரியே கார்மேல் |
அம்மா மரியே கார்மேல் தாயே அடைக்கலம் நாடிவந்தோம் - உந்தன் அருளினைத் தேடி வந்தோம் காத்திடுவாய் கரம் தனிலே நடத்திடுவாய் கரம் பிடித்தே ஆண்டவரின் தாயானாய் - உந்தன் ஆம் என்ற வார்த்தையிலே அகிலத்தின் தாயானாய் - உந்தன் அன்பின் முழுமையிலே வளர்பிறையின் முழுநிலவே வாழ்த்துகின்றோம் எங்கள் அருள் அன்னையே கார்மேலின் அரசியாக - நீர் காலமும் ஆட்சி செய்கின்றாய் வானகமும் வையகமும் - உம்மை வாழ்த்தி மகிழ்கின்றது கலங்கரை விளக்கே காருண்யமே காலமும் புகழ்வோம் அருள் அன்னையே |