Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அம்மா மரியே அற்புதமே

அம்மா மரியே அற்புதமே அழகு இரத்தினமே
இம்மானிடத்தின் வெளிச்சமே இனிக்கும் தெள்ளமுதே
நம்பி வந்தோம் அன்னையே நன்மைகளின் நாயகியே
நலமும் அருள் வளமும் - நீ எமக்கருள்வாயே
அம்மா அம்மா அருங்கொடையே வாழ்க வாழ்க
அன்பே அன்பே இதயத்திலே வாழ்க வாழ்க

அடிமை நானெனப் பணிந்தாய் - நீதி
ஆதவனை மாடி சுமந்தாய்
கானாவூரின் கல்யாணத்தில்
கவலை தீர்க்க விரைந்தாய்
கல்வாரி மலை மேல்
கண்ணீர்க் கடலில் கரைந்தாய் - நீ
கண்ணீர்க் கடலில் கரைந்தாய்

கடற்கரையின் ஓரம் - நீ
கலங்கரை விளக்கானாய் - 2
கருணை மழையில் நனைந்தோம் - மனக்
கலக்கம் யாவும் குறைந்தோம் - 2
கவிதை நூறு புனைந்தோம் - உன்
பதத்தை நாடி மகிழ்ந்தோம் - 2









 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா