மாதாபாடல்கள் | அம்மா அம்மா மரியே |
அம்மா அம்மா மரியே எந்தன் அன்பின் தாயே உன் மகன் இயேசுவால் எல்லாமே ஆகுமே பரிந்து நீயும் பேசியே எம்மை என்றும் காப்பாயே கரம் பிடித்து நடத்தியே இறைபாதம் சேர்ப்பாயே அன்னை நீ இல்லையேல் வெற்றி ஏதும் இல்லையே உந்தன் அன்பு இருந்தாலே தோல்வியே இல்லையே அருள் நிறைந்த மரியே நீ என்றென்றும் வாழ்கவே யார் என்னை மறந்தாலும் மறக்காத தாயே ஊர் என்னை வெறுத்தாலும் அணைக்கின்ற தாயே முடிவில்லா வாழ்விற்கே வழி காட்டும் தாயே |