மாதாபாடல்கள் | அம்மா அம்மா மரியே மரியே |
அம்மா அம்மா மரியே மரியே அருளால் எங்கள் தாயே இருளை நீக்கும் ஒளியே ஒளியே இகமதில் எமக்கு வழியே சாதனையானாள் சரித்திரம் படைத்தாள் தாயை இயேசு தந்தார் வேதனை கொண்டோம் எம்முள்ளம் சோர்ந்தோம் வேளையில் உதவி செய்தாய் ஆன்மீகம் மலருது ஆனந்தம் பெருகுது அன்னையே உன் துணையினிலே ஆ...ஆ...ஆ...ஆ.... துணையிது வாழ்வில் நிறைவுகள் காண இயேசுவை வேண்டி நின்றாய் புது வழி கண்டு புது நலம் சேர்க்க இறைவனே உன்னைத் தந்தார் அம்மா அம்மா அம்மா அம்மா (2) அருளினை இழந்தோம் வாழ்வின் பொருளினை இழந்தோம் அன்னையே உன்னை மறந்து நின்றோம் ஆ...ஆ...ஆ...ஆ.... அன்பின் கனிவே அருளின் உருவே குடும்பமாய் அமர்ந்து ஜெபிப்போம் அனுதினம் செபமாலை சொல்லியே மகிழ்வோம் அன்னையே உம்மை மறவோம் அம்மா அம்மா அம்மா அம்மா (2) |