மாதாபாடல்கள் | அமலோற்பவத் தாயே |
அமலோற்பவத் தாயே (2) இதோ இன்று பாவியாகிய நான் ஞானஸ்நானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டை உமது கரங்களில் புதுப்பித்து உறுதிப்படுத்துகின்றேன் அலகையையும் அதன் செயல்கள் அனைத்தையும் ஆரவாரங்களையும் நான் விட்டுவிடுகின்றேன் முடிவில்லாத ஞானமாகிய இயேசுக்கிறீஸ்துவுக்கு என்னையே முழுவதும் அர்ப்பணிக்கின்றேன் எமது வாழ்நாளில் அனைத்து இன்ப துன்பங்களை அவரின் பாடுகளில் ஒன்றித்து ஏற்று நடந்திடுவேன் அவருக்கு இன்னும் அதிக பிரமாணிக்கமாய் இருக்க வாக்களிக்கின்றேன் விண்ணவர் அனைவர் முன்னிலையில் உம்மை எந்தன் அன்னையாக அரசியாக தேர்ந்து ஏற்றுக் கொள்கின்றேன் எந்தன் உயிர் உடல் பொருள் அனைத்தையும் எந்தன் வாழ்நாளெல்லாம் உந்தன் நேச அடிமையாக நான் செய்யும் நற்செயல்களையும் பெறுகின்ற பயன் அனைத்தையும் உமது பாதம் ஒப்புக் கொடுக்கின்றேன் என்னில் உள்ளவற்றை என்னைச் சார்ந்தவற்ற என்றுமே பிரியத்தோடு என்றுமே உரிமையோடு இறைவனின் அதி உன்னத மகிமைக்காக நடத்த கையளிக்கின்றேன் விண்ணவர் அனைவர் முன்னிலையில் உம்மை எந்தன் அன்னையாக அரசியாக தேர்ந்து ஏற்றுக் கொள்கின்றேன் |