மாதாபாடல்கள் | அமல உற்பவத் தாய்மரி |
அமல உற்பவத் தாய்மரி நீயே உம்மைத் தேடி ஓடி வந்தோம் எம்மை ஏற்பாய் அருள் மரியே வேளை நகர் கொண்ட ஆரோக்கியத்தாயே ஏழு துறையெங்கும் பனிமயம் நீயே தினமும் செபிக்கின்ற ஜெபமாலை மரியே உந்தன் பாதம் தேடி வந்தோம் பாரில் துயர் நீக்கும் சகாயத்தாயே பாவி எமைத் தேற்றும் லூர்தம்மா நீயே அகிலம் அரசாளும் அடைக்கல அன்னையே உந்தன் பாதம் தேடி வந்தோம் கோடைமலை வாழும் சலேத்துத்தாயே ஏழை நிலை உயர்த்தும் அலங்காரம் நீயே தேவனை தாங்கிய வியாகுல அன்னையே உந்தன் பாதம் தேடி வந்தோம் |