Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அலங்காரத் தேரிலே


அலங்காரத் தேரிலே அன்னை வருகின்றாள்
கலங்காதீர் துணையிருப்பேன் என்று அருள்கின்றாள் - 2
வாழ்க வாழ்க வாழ்க மரியே - 4

குழலும் யாழும் போல அவள் புகழைப் பாடுவோம்
மழலை நெஞ்சமாக அவள் பாதம் சேருவோம் (2)
சுழலும் மாய உலகின் சூழ்ச்சியை வெல்வோம் - 2
திருச்சுதனின் அன்னை அவளே - அந்த
அருள் தருவாள் பணிவோம்
வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2

உலகின் ஒளியை ஏந்தி நல் வழியைக் காட்டினாள்
உருகி வேண்டும் நெஞ்சில் பெருங்கருணை காட்டினாள்
வளரும் வான அரசில் நாம் இணைந்திடவே - 2
நம் வேந்தன் யேசு அழைக்கும்
அன்புக் குரலெனவே எழுந்தாள்
வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2



 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா