Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அழகோவியமே எங்கள்

அழகோவியமே எங்கள் அன்னை மரியே
உயிரோவியமே எங்கள் உள்ளம் கவர்ந்தவளே - 2 - உன்
பார்வை சொல்லும் கருணையும்  பாத மலரின் அருமையும்
அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே

கோடான கோடி மக்களைத் தீர்ப்பவளே
கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே
அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே
ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே
யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே
உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளது எல்லாம் தந்தோம்
உந்தன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளம் மகிழுதே
உந்தன் நாமத்தைச் சொல்லும்போது நெஞ்சம் இனிக்குதே

ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு எல்லாம்
ஆதரவு தருபவளே வேளாங்கண்ணித் தாய் மரயே
அம்மா உன் காட்சி எல்லாம் ஏழைகளின் பாக்கியமே
எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் உம் திருக்கரமே
கண்ணின் மணியைப்போலே எம்மைக் காத்திடும் தெய்வத்தாயே
மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பதம் பற்றியே வாழ்வோம்
இன்னும் ஒருமுறை எம்தாயே நீ இந்த உலகினில் பிறந்தால்
ஏழை எளியவர் உம்மோடு இங்கு புது உலகம் படைப்பார்




 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா