மாதாபாடல்கள் | அழகே அன்னை மரியாவே |
அழகே அன்னை மரியாவே ஆரோக்கிய மாதாவே அடியோர் எம்மைக் காப்பாயே ஆண்டவரில் சேர்ப்பாயே அருளே நிறைந்த மரியே வாழ்க ஆகாயத்தின் நிலவே வாழ்க இறை உள்ளம் கவர்ந்த உத்தமியே உன்னதத்தின் பாத்திரமே ஆம் என்ற ஒருசொல்லால் ஆண்டவரின் தாயானாய் அன்பு என்னும் தேனமுதாய் அகிலத்தில: வலம் வந்தாய் நம்பி வந்தோர் நலம் பெறுவார் நானிலமும் போற்றிடுவார் ஏழை எம்மைக் காப்பாயே ஏசு பாதம் சேர்ப்பாயே இதோ உந்தன் அடிமை என்றாய் இறைவன் மனித உருவானார் மீட்பு என்னும் வானரசை மாந்தர்கள் கண்டாரே தேடி வந்தோர் விலை பெறுவார் திசையெல்லாம் பாடிடுவார் பாவி எம்மைக் காப்பாயே பரமன் அருள் சேர்ப்பாயே |