மாதாபாடல்கள் | அடைக்கலமே எங்கள் தாயே |
அடைக்கலமே எங்கள் தாயே அருள் நிறைந்த மாமரியே கண்ணின் மணியே விண்மீனே வாழ்க வாழ்க - எம் வெண்ணிலவே விண்மீனே வாழ்க வாழ்க புரட்சி மகனைக் கருவில் சுமந்தாய் புன்னகை ஒளியில் துயரம் களைந்தாய் வறுமைப் பிணியைத் துடைத்தாய் கருணைக் கனியை வளர்த்தாய் வெண்நிலவே விண்மீனே வாழ்க வாழ்க (2) எம் வெண்நிலவே விண்மீனே வாழ்க வாழ்க இன்னல் இடரை உன் துணை நீக்கும் ஏழை வாழ்வில் நலன்கள் சேர்க்கும் துன்பக் கடலில் தவிப்போரை உந்தன் கருணை சேர்க்கும் வெண்நிலவே விண்மீனே வாழ்க வாழ்க (2) எம் வெண்நிலவே விண்மீனே வாழ்க வாழ்க |